செல்ஃபி

மலையுச்சியில் தன்  சுய உருவத்தைப்

படம் பிடிக்க  முயன்றபோது

அவன்  சுயநினைவு இழந்து

போனான். 

என்னவாயிற்று என்று 

அவனுக்குத் தெரியவில்லை.

அவன்  போட்டோவுக்கு விளக்கேற்றி 

இருந்தார்கள். போட்டோ  எடுப்பது

 அவனுக்குப் பிடித்த விஷயம் 

என்று  அழுது  கொண்டே சொன்னாள் 

அவன் அம்மா.

—–அரங்க. குமார்.

சென்னை: 49.