அழகு (விருத்தக் கவிதை )
மின்னிடும் விழிகள் அழகோ?
மீதுள புருவம் அழகோ?
தின்னிடத் தோன்றும் இனிய
தேன்சுவை இதழ்கள் அழகோ?
விம்மிடும் பெண்மை அழகோ?
மெல்லிய இடைதான் அழகோ?
எவ்விதஞ் சொல்வேன் என்றன்
விழிகளில் நீயே அழகு!
விரிந்தது மயிலின் தோகை
சிலிர்த்தது மேகங் கண்டா?
விரும்பிய பேடை கண்டா?
எறும்புகள் கரும்பை நாடும்;
அரும்பினை வண்டு தேடும்;
பிறந்தயிவ் உலகந் தன்னில்
விரும்புதல் இல்லை என்றால்
வெறுப்புதான் மிஞ்சும் வாழ்வில்!
வில்லினைப் புருவமாக்கி வேலினை விழிகளாக்கி
மெல்லித ழிரண்டினையும் மாங்கனிச் சுளைகளாக்கி
விம்மிடும் அழகிரண்டை கோபுரக் கலசமாக்கி
பிடியிடை யென்றுகூறி நடையினில் அன்னமாக்கி
செந்தொடை மீதுயெந்தன் சிரசினை வைத்தெனக்கு
நிம்மதி தருவதிங்கு நின்மடி யென்றுரைத்து
பொற்பதங் களைப்பற்றி யற்புத மென்பதெல்லாம்
கற்பனை யன்றுகாதல் செய்கிற சித்துதானே!
———அரங்க.குமார்
சென்னை – 600049.
Awesome!! 🙂