முரண்பாடுகள் ( புதுக்கவிதை )

புறாவும் பருந்தும்
சமாதானம் ஆவது எப்பொழுது?
சமத்துவக் கூட்டில்
வாழ்வது எப்பொழுது?
பருந்துக்குப் பசி எடுக்காமல்
பார்த்துக் கொள்ளும் வரையிலா?

காட்டில் ஒரு சிங்கம்
ஒரு மான் குட்டியைப் புரட்டி விளையாடியது.
என் கடைவாய்ப் பல்லுக்குக் கூட
போதமாட்டாய் என்று
சலித்திருக்குமோ?
தான் ஈன்ற குட்டியை நினைத்து
பரிதாபப்பட்டு இருக்குமோ?
சிங்கத்துக்கும் மனம் உண்டு.
மாறும் மனம்.
———– அரங்க. குமார்.
சென்னை – 600049