செருப்பு [புதுக் கவிதை]

 

சக்கிலியன்
COBBLER

செருப்பு  [புதுக் கவிதை]

சித்திரை மாதம்

உச்சி வெயிலில்

ஆற்று மணலிலும்

தார்ச் சாலைகளிலும்

வெறும் காலில் நடந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்

சூட்டின் தன்மை.

பரதம் அறியாதவர்களும்

ஆடிக் காண்பிப்பார்கள்.

 

சிறு பிள்ளைகளாய் இருந்தால்

வீரிட்டு அழுவார்கள்.

கிராமவாசிகள்

வேலமரத்து முள்ளோ, நெருஞ்சி முள்ளோ

குத்தினால் எப்படி இருக்கும் என்பதை அறிவார்கள்.

மருத்துவ வசதி இல்லாமல்

உள்ளே சென்றுவிட்ட முள்ளை

எடுக்க முடியாமல்

குத்தின இடத்தில்

அரைத்த மஞ்சளையோ உப்பையோ

வைத்து சுடும்பொழுது

ஏற்படும் வலியை எப்படிச் சொல்வது?

சீழ்ப் பிடித்து இரணசிகிச்சை வரை செல்லும் பொழுது

உழைப்பாளிக்கு உழைப்பும், நேரமும் பொருட்செலவும்

வீண் தானே?

 

ஒரு சோடி செருப்பு வாங்கமுடியாமல்

எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் செருப்பை

வீட்டிற்குள்ளா கொண்டு செல்கிறோம்?

செருப்புதானே என்று இழிவாகப் பேசுகிறோம்.

செருப்பு நாடாண்டு இருக்கிறது.

செருப்பு சட்டசபையிலும்

பாராளுமன்றத்திலும்

மந்திரிகளை அவமானம் செய்கிறது.

 

ஆண்டவனுக்குத்

தங்கத்தில் பாதுகைகள் செய்தால்

தொட்டு வணங்குகிறோம்.

 

செருப்பை செய்பவன் வளர்ந்தானா?

எங்கெங்கோ வீண் செலவு செய்துவிட்டு

சக்கிலியனிடம் பேரம் பேசி சண்டைப் பிடிப்பார்கள்.

                                                             ————அரங்க. குமார்

 

மிதிவண்டி [புதுக் கவிதை]

 

bicycle
மிதிவண்டி

மிதிவண்டி

சிவனுக்கு வாகனம் எருது.

திருமாலுக்கு வாகனம் கருடன் .

முருகனுக்கு வாகனம் மயில்.

இப்படியாக எனக்கு வாகனம் மிதிவண்டியாயிற்று.

அதனால்

நான் கடவுளல்ல.

என் பொருளாதாரம்

எனக்கு மிதிவண்டியை  மட்டுமே சொந்தமாக்கியது.

மிதிவண்டி எனக்கு ஓர் அற்புதமான தத்துவத்தை விளக்கியது.

ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும்

பல தொழிலாளிகளின் உழைப்பு இருக்கும்.

மிதிபடுவதும் உழைப்பதும் பின்சக்கரம்.

இலகுவாகச்  செல்வது முன்சக்கரம்.

முன்சக்கரமும் , பின்சக்கரமும்

உழைப்பு என்ற சங்கிலியால் பிணைக்கப்படவில்லை.

அதிகாரம் என்ற இரும்புச் சட்டத்தினாலேயே இணைக்கப்பட்டுள்ளது.

நடுவில் உள்ள நாம் இடைத்தரகர்கள்.

என்

மிதிவண்டி

என் புகை பிடிக்காத நண்பன்.

சுற்றுச்சூழலைப்  பாதிக்காதவன்.

நானும் காற்றைச்  சுவாசிக்கிறேன்.

அவனுக்கும் காற்று அவசியம்.

என் உழைப்பிற்கேற்ப

எங்கு வேண்டுமானாலும் கொண்டுசெல்வான்.

எனக்கு வீண் செலவு வைக்காத நண்பன்.

அவன் ரப்பர் பாதங்களை

கல்லும், முள்ளும் குத்திக் கிழிக்கும் பொழுது மட்டுமே

அவனுக்கு  நான் வைத்தியம் செய்கிறேன்.

 

அவன் என்னை மட்டுமா சுமந்து செல்கிறான்.

என் நண்பனையும், உறவுகளையும்

மறுக்காமல் சுமக்கிறான்.

என் வழிகாட்டுதலிலேயே அவன் செல்கிறான்.

மேட்டில் ஏறும் பொழுது

அவன் சிரமப்படுவான்.

நானும் அவனோடு சேர்ந்து உழைப்பேன்.

பள்ளத்தில் பாய்ந்து செல்வான்.

நான் அவன் காதுகளைத் திருகி

மட்டுப்படுத்துவேன்.

யாராவது வழியில் குறுக்கிட்டால்

அவனைச் சுண்டினால் போதும்.

சத்தம் போட்டு விரட்டுவான்.

என் மிதிவண்டி என் பிள்ளைகளுக்கும் நண்பன்.

 

                                                             ————அரங்க. குமார்

மங்கள்யான்

                                            மங்கள்யான் விண்கலம்

       இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ [ISRO]  ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து,   5-11-2013 அன்று  PSLV – C25 ராக்கெட்டின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைப் படைத்தது.  உலகமே அதை வியந்து பார்த்தது. அதன் பாதை ஆறு நிலைகளில் மாற்றி அமைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது.  அதன்படி 11-12-2013 அன்று முதன் முதலாக அதன் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது அது பூமியிலிருந்து 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்துகொண்டு இருந்தது. 11-2-2014 –ம் தேதி வரை அது தன் நூறு நாள் பயணத்தை முடித்து இருந்தது.

MOM-ISRO-poster (1)

 

      

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்
International Space Station

ஐ.எஸ். எஸ் [ இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ] [ ISS – International  Space Station ]

விண்வெளி நகரம் அல்லது அண்டவெளியின் சாளரம் என்று அழைக்கப்படுகிற விண்வெளி ஆய்வுக்கூடம் விண்வெளி மற்றும் சூரிய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கும் அதனால் நம் பூமி கிரகத்தில்  ஏற்படக்கூடிய விளைவுகளைப்  பற்றித் தெரிந்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

        இந்த விண்வெளி ஆய்வுக்கூடம் சுமார் 460 டன் எடை உள்ளது.

 

வள்ளுவர் கூறியுள்ள பொருள் பற்றிய கருத்துக்கள்

பொதுவாக கற்றறிந்தவர்கள் சபைக்கு அதிகம் கல்லாதவர்களோ அல்லது அறிவிலிகளோ சென்று பேச முற்படுவது மடைமை என்று பெரியோர்கள் கூறுவர். வள்ளுவரும் இதை வலியுறுத்திக் கூறியுள்ளார். அவையறிந்து பேசவேண்டும் என்பார்.  மதுரை தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற அரைகுறையாக கற்றறிந்த புலவன் அவமானப்பட்ட கதையை தமிழுலகம் அறியும். ஆண்டவனே ஆனாலும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர் என்ற புலவர்.

   பிண்ணாக்கு வியாபாரம் செய்து பெரிய கோட்டீஸ்வரரான  ஒருவர் தன்னிடம் உள்ள மிகுதியான பணத்தைக் கொண்டு ஒருகல்லூரிதொடங்கலாம். அதைத் தவறு என்றும்கூறமுடியாது. ஒரு கல்லூரி என்றாலே அதில் மெத்தப்படித்த அனுபவம் வாய்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார். ஒரு துணைமுதல்வர் இருப்பார். பேராசிரியர்கள் பலர் இருப்பார்கள். எழுத்தர்கள், கணக்கர்கள் என்று படித்த பல பேர்கள் வேலை செய்வார்கள். இந்தப் பதவிகளில்  எல்லாம் படித்தவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். ஒரு கல்லூரி விழாவில் அனைவரும் குழுமி  இருப்பார்கள். அப்பொழுது கல்லூரியின் நிறுவனர் வந்தால் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இங்கு அதிகம் படிப்பறிவில்லாத ஒருவர் தான் பெற்ற செல்வத்தினால் கற்றறிந்தவர்கள் மரியாதைசெய்யும் அளவிற்கு உயர்ந்து  நிற்கிறார்.         ஒருபொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் பொருளைவிடச் சிறந்த பொருள்  வேறுஒன்றும் இல்லை. இதைத்தான் திருவள்ளுவர்,

பொருளல்லவரைப்பொருளாகச்செய்யும்

  பொருளல்லதுஇல்லைபொருள்.”

என்று  உரைக்கின்றார்.        

 

 

மதுரையின் பேரரசி

மதுரை அரசாளும் மீனாட்சி
Madurai Arasaalum Meenaatchi

மதுரை மாநகரம் பழம்பெருமை வாய்ந்த நகரம். முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். வைகையாற்றின் கரையில் அமைந்த நகரம். பாண்டியப் பேரரசின் தலைநகரம்.கலை நகரம். இதை கூடல் மாநகரம் என்றும் ஆலவாய் நகரம் என்றும் அழைப்பார்கள். கீழ்த் திசையின் ஏதென்ஸ் என்றும் அழைப்பார்கள். ஏனென்றால் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரம். சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் பழமையும் பன்னெடுங்காலமாக பெருமை குன்றாத பாரம்பரியமும் வாய்ந்த நகரம். மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றும் கூறலாம். அதே போன்று மதுரையும் பழமையும், பெருமையும் வாய்ந்த நகரம் ஆகும். தமிழர் நாகரிகம் வளர்ந்த இடமாகும். தமிழர்கள் வணங்கும் தெய்வமாகிய அன்னை பார்வதி தேவி, பாண்டிய மன்னன் மலயத்துவஜனுக்கும்  அவன் மனைவி காஞ்சனமாலைக்கும் மகளாகப் பிறந்து மீனாட்சி என்கிற பெயர் கொண்டு வளர்ந்து ஈடு இணையற்றப் பெண்ணரசியாகத் திகழ்ந்து மதுரையின் பேரரசியாக ஆண்டார். பின்னர் இறைவனாகிய சிவபெருமான் சுந்தரேஸ்வரராக வந்து அன்னையை மணம்புரிந்து கைலாயம் சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இறைவனுக்கு திரு ஆலவாயன் என்ற பெயர் உண்டாதலால் ஆலவாய் நகரம் என்ற பெயரும் ஏற்பட்டது..

             இன்று மதுரை மாநகரம் இருக்கும் இடம் கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாகவும், ஒரு சமயம் வணிகன் ஒருவன் அந்தக் காட்டின் வழியே செல்லும்பொழுது தேவர்களின் தலைவனாகிய தேவேந்திரன் ஒரு சுயம்பு லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அதை அன்று மதுரையை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியன் என்ற மன்னனிடம் சென்று கூறினானாம். அந்த மன்னன் அந்த லிங்கத்தைக் கண்டு வழிபட்டு, அங்கிருந்த கடம்ப வனத்தை அழித்து  அங்கு ஓர்  ஆலயத்தையும் அதைச் சுற்றி தாமரை மலரின் இதழ்கள் போன்று அமைந்த ஒரு நகரத்தையும் அமைத்தானாம். அது தான் இன்றைய மதுரை மாநகரம் என்றும் மற்றொரு புராணக் கதை கூறுகிறது.

                  பழைய மதுரை லெமூரியாக் கண்டத்தில் இருந்ததாகவும் கடல்கோள் [சுனாமி] ஏற்பட்டு கடலில் மூழ்கியதால் தற்பொழுதைய மதுரை ஏற்பட்டதாகவும் இலக்கிய மற்றும் நிலவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

கடவுள் வாழ்த்து

பாலும்  தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் -கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!  நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில்

The Athens of East [ Madurai Meenaatchi Amman Temple]

 

பாரதியின் வழியில் …

 மகாகவி சுப்ரமணிய பாரதியார்
Maha Kavi Subramaniya Bharathiyar

    யாமறிந்த  புலவரிலே  கம்பனைப்போல்,                                                             –  வள்ளுவர்போல்

        இளங்கோ வைப்போல்,

பூமிதனில்   யாங்கணுமே   பிறந்ததில்லை,                   -உண்மைவெறும்

புகழ்ச்சி யில்லை,

ஊமையராய்ச்  செவிடர்களாய்க்   குருடர்களாய் -வாழ்கின்றோம்

ஒருசொற் கேளீர்!

சேமமுற  வேண்டுமெனில்  தெருவெல்லாம் -தமிழ்முழக்கம்

                                 செழிக்கச் செய்வீர்!……………………….   1

 

பிறநாட்டு   நல்லறிஞர்   சாத்திரங்கள்   தமிழ்மொழியிற்

 பெயர்த்தல் வேண்டும்

இறவாத   புகழுடைய   புதுநூல்கள்   தமிழ்மொழியில்

இயற்றல் வேண்டும்

மறைவாக   நமக்குள்ளே   பழங்கதைகள்  சொல்வதிலோர்

மகிமை   இல்லை

திறமான   புலமையெனில்  வெளிநாட்டோர் -அதைவணக்கஞ்

                                           செய்தல்  வேண்டும்.  …………………………….. 2

 

உள்ளத்தில்   உண்மையொளி  யுண்டாயின்   வாக்கினிலே

ஒளியுண்  டாகும்

வெள்ளத்தின்  பெருக்கைப்போல்  கலைப்பெருக்கும் -கவிப்பெருக்கும்

மேவு  மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்  -விழிபெற்றுப்

பதவி  கொள்வார்,

தெள்ளுற்ற   தமிழமுதின்   சுவைகண்டார்  இங்கமரர்

                                               சிறப்புக்   கண்டார்……………………………. 3

 

யாமறிந்த  மொழிகளிலே  தமிழ்மொழிபோல் -இனிதாவது

எங்கும்  காணோம்,

பாமரராய்    விலங்குகளாய்,   உலகனைத்தும் -இகழ்ச்சிசொலப்

பான்மை  கெட்டு,

   நாமமது   தமிழரெனக்  கொண்டு இங்கு   வாழ்ந்திடுதல்

நன்றோ?  சொல்லீர்!

 தேமதுரத்    தமிழோசை  உலகமெலாம்   பரவும்வகை

                                    செய்தல்   வேண்டும்…………………………… 4

 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் .