தப்புத் தப்பாக (புதுக் கவிதை)
கண்ணே!
உன்னைக் காதலித்தேன்.
நீ மறுத்துவிட்டாய்.
நான் தற்கொலை செய்துகொள்வேன்
என்று நீ நினைத்தாயோ?
உன் நினைவாக
என் காதலை
இந்த இரயில் பெட்டியில்
தப்புத்தப்பாகக்
கிறுக்கி வைத்துவிட்டு
அடுத்தப் பெட்டிக்குப் போவேன்!
அங்கு
வேறொரு புதுக்கவிதை எழுதுவேன்!
தப்புத்தப்பாக….
—- அரங்க. குமார்.