மங்கள்யான் விண்கலம்
இந்தியாவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ [ISRO] ஸ்ரீ ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, 5-11-2013 அன்று PSLV – C25 ராக்கெட்டின் மூலம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான விண்கலத்தை விண்ணில் ஏவி சாதனைப் படைத்தது. உலகமே அதை வியந்து பார்த்தது. அதன் பாதை ஆறு நிலைகளில் மாற்றி அமைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 11-12-2013 அன்று முதன் முதலாக அதன் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது அது பூமியிலிருந்து 29 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பயணம் செய்துகொண்டு இருந்தது. 11-2-2014 –ம் தேதி வரை அது தன் நூறு நாள் பயணத்தை முடித்து இருந்தது.