யாரை நம்புவது? [ புதுக்கவிதை ]
தகப்பன் பாசமறியாத
கோழிக் குஞ்சுகளே!
தாயை அறிவீர்கள்.
அவளும் ஒருநாள்
உங்களைக் குத்தி விரட்டுவாள்.
யாரை நம்பி வளர்கின்றீர்கள்.
ஆண்டவனை நம்பியா?
மனிதனை நம்பியா?
என்று நான் கேட்டேன்.
நாங்கள் ஆண்டவனையும் நம்பவில்லை.
மனிதர்களையும் நம்பவில்லை.
மனிதன் ஆண்டவன் பெயரைச்
சொல்லியல்லவா எங்களை அறுக்கின்றான்
என்றன.
---------------அரங்க. குமார் சென்னை - 600049