கண்ணே! உன்னைக் காதலித்தேன். நீ மறுத்துவிட்டாய். நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று நீ நினைத்தாயோ?
உன் நினைவாக என் காதலை இந்த இரயில் பெட்டியில் தப்புத்தப்பாகக் கிறுக்கி வைத்துவிட்டு அடுத்தப் பெட்டிக்குப் போவேன்! அங்கு வேறொரு புதுக்கவிதை எழுதுவேன்! தப்புத்தப்பாக…. —- அரங்க. குமார்.
பொதுவாக கற்றறிந்தவர்கள் சபைக்கு அதிகம் கல்லாதவர்களோ அல்லது அறிவிலிகளோ சென்று பேச முற்படுவது மடைமை என்று பெரியோர்கள் கூறுவர். வள்ளுவரும் இதை வலியுறுத்திக் கூறியுள்ளார். அவையறிந்து பேசவேண்டும் என்பார்.மதுரை தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற அரைகுறையாக கற்றறிந்த புலவன் அவமானப்பட்ட கதையை தமிழுலகம் அறியும். ஆண்டவனே ஆனாலும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர் என்ற புலவர்.
பிண்ணாக்கு வியாபாரம் செய்து பெரிய கோட்டீஸ்வரரானஒருவர் தன்னிடம் உள்ள மிகுதியான பணத்தைக் கொண்டு ஒருகல்லூரிதொடங்கலாம். அதைத் தவறு என்றும்கூறமுடியாது. ஒரு கல்லூரி என்றாலே அதில் மெத்தப்படித்த அனுபவம் வாய்ந்த ஒருவர் முதல்வராக இருப்பார். ஒரு துணைமுதல்வர் இருப்பார். பேராசிரியர்கள் பலர் இருப்பார்கள். எழுத்தர்கள், கணக்கர்கள் என்று படித்த பல பேர்கள் வேலை செய்வார்கள். இந்தப் பதவிகளில்எல்லாம் படித்தவர்கள் மட்டுமே வேலை செய்ய முடியும். ஒரு கல்லூரி விழாவில் அனைவரும் குழுமிஇருப்பார்கள். அப்பொழுது கல்லூரியின் நிறுவனர் வந்தால் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இங்கு அதிகம் படிப்பறிவில்லாத ஒருவர் தான் பெற்ற செல்வத்தினால் கற்றறிந்தவர்கள் மரியாதைசெய்யும் அளவிற்கு உயர்ந்துநிற்கிறார். ஒருபொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் பொருளைவிடச் சிறந்த பொருள்வேறுஒன்றும் இல்லை. இதைத்தான் திருவள்ளுவர்,